Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேலை நிறுத்தப் போராட்டம்…. வங்கி, தபால் சேவைகள் முடக்கம்…. பொதுமக்கள் அவதி….!!

அரசு ஊழியர்களின் போராட்டத்தினால் ரூபாய் 200 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப்போக்கு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கியது. ஆனால் மத்திய அரசு அலுவலகங்களான தபால், வங்கி, வருமான வரித்துறை, காப்பீடு அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பலர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் தபால் மற்றும் வங்கிகள் திறக்கப்படாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 100 வங்கிகள் உள்ளது. இங்கு பணிபுரியும் சுமார் 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இந்த போராட்டத்தினால் 200 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |