பணி நேரத்தின் போது வெப் கேமராவை ஆன் செய்ய சொன்ன நிறுவனத்தின் மீது கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவின் ளோரிடா மாகாணத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் டெலி மார்க்கெட்டிங் நிறுவனம் சேட்டு. இந்த நிறுவனத்தின் கிளை அலுவலகம் ஒன்று நெதர்லாந்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அலுவலகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் நெதர்லாந்து சேர்ந்த ஒரு நபர் ஊழியராக பணிக்கு சேர்ந்துள்ளார். இவர் வேலைக்கு சேர்ந்து சுமார் ஒரு வருடம் கழித்து அந்த ஊழியருக்கு ஆன்லைன் வழியாக மெய்நிகர் பயிற்சி காலத்தில் கலந்து கொள்ளுமாறு நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த பயிற்சி காலத்தின் போது ஊழியர்களை கண்காணிப்பதற்கும் திறன் மேம்பாட்டு அளவை கணக்கிடவும் ஒரு நாளுக்கு எட்டு மணி நேரமும் ஊழியரை நேரடி கண்காணிப்பில் வைக்க சேட்டு நிறுவனம் முடிவு செய்து இருக்கின்றது. அதன்படி நிறுவன ஊழியர்கள் ஒரு நாளில் எட்டு மணி நேரம் பணியரத்தின் போது வெப்கேம் ஆன் செய்திருக்க வேண்டும் அதேபோல் அவர்கள் பணியாற்றும் டிஜிட்டல் ஸ்கிரீனையும் பகிர வேண்டும் என ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. கணினியின் ஸ்கிரீனை பகிர சொல்வது சரி ஆனால் வெப்பனை ஆன் செய்ய வேண்டும் என நிறுவனத்தின் இந்த விதிமுறையை பின்பற்ற முடியாது என அந்த நெதர்லாந்து ஊழியர் கூறியுள்ளார்.
இதனால் அந்த நிறுவனம் அந்த ஊழியரை பணி நீக்கம் செய்துள்ளது இந்த விவகாரத்தில் நியாயமற்ற முறையில் தன்னை பணி நீக்கம் செய்யப்பட்டதற்காக அந்த ஊழியர் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார். இதனை அடுத்து இந்த வழக்கில் தீர்ப்பளித்த கோர்ட் பணியிடத்தில் ஒரு ஊழியரை வீடியோ கண்காணிப்பு செய்வது அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதாகவும் என தெரிவித்தது. மேலும் வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களை வெப் கேமராவை ஆன் செய்ய செல்வது மனித உரிமை மீறலாகும் என கோர்ட் தெரிவித்துள்ளது அது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட நெதர்லாந்து ஊழியருக்கு சேட்டு நிறுவனம் சுமார் 72 ஆயிரத்து 700 அமெரிக்க டாலரை அபராதமாக வழங்க வேண்டும் என கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.