Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலை நேரத்தை குறைக்க வேண்டும்…. பல்வேறு அமைப்பினரின் கோரிக்கை மனு…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

100 நாள் வேலை திட்டத்தில் ஊதியத்தை உயர்த்த கோரி அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வீரபாண்டி, மாவட்ட தலைவர் ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆண்டி, தி.மு.க. கிளைச் செயலாளர் நவமணி ஆகியோர் சென்று அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு செல்லும் பணியாளர்களை 6 மணி அளவில் வரச்சொல்லி ஊதியத்தை குறித்து வழங்குகின்றனர். இதனால் பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வேலை நேரத்தை காளை 8 மணி அளவில் மாற்றி ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து  மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

Categories

Tech |