திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். பி.ஏ பட்டதாரியான கார்த்திக் பிஸ்கெட் கம்பெனியில் வேலை பார்க்கிறார். அதே கம்பெனியில் வேலை பார்க்கும் அபிநயா என்பவரும் கார்த்திக்கும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததால் மணமக்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.
Categories