மில் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் இருக்கும் தனியார் ஆயில் மில்லில் ரவிச்சந்திரன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கும், அதே மில்லில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணிற்கும் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த மில் உரிமையாளர் அலாவுதீன் என்பவர் ரவிச்சந்திரனை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ரவிச்சந்திரன் மில் அலுவலகத்தில் இருக்கும் ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரவிச்சந்திரனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.