மீனவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவளம் பகுதியில் மீனவரான சகாயம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், இரண்டு வயதில் ஒரு குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சகாயத்தின் முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு அவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த சகாயம் நேற்று மதியம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சகாயத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.