பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஈஞ்சார் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று பட்டாசு ஆலையில் குழாய் அமைக்கும் பணியில் மாரி ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வெல்டிங் தீ பட்டாசில் விழுந்து பட்டாசு வெடித்து சிதறியுள்ளது. இதில் படுகாயமடைந்த மாரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காகஅரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.