மரக்கட்டை விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மனேகோடு கிராமத்தில் கூலி தொழிலாளியான யோகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளைக்கு டிராக்டரில் மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென டிராக்டரில் இருந்த மரக்கட்டை ஒன்று யோகத்தின் மீது பலமாக விழுந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த யோகத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி யோகம் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.