Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்துக்கொண்டிருந்த மின்வாரிய ஊழியர்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மின்சாரம் தாக்கி வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழப்புதகிரி  கிராமத்தில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருக்காட்டுப்பள்ளி மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று கலையரசன் கூடணாணல்  சாலை ஓரத்தில் அமைந்திருந்த பழைய மின் கம்பத்தில் ஏறி வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.அப்போது திடீரென கலையரசன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கலையரசனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு கலையரசனை  பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கலையரசனின் உறவினர்கள் உரிய இழப்பீடு வழங்க கோரி பேருந்து நிலையத்தில்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன், இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் மின்வாரிய அதிகாரி பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து கலையரசனின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துயினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |