மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் ரெட்டிபாளையம் பகுதியில் ராஜவேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சங்ககிரி பகுதியில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ராஜவேலு டிரான்ஸ்பார்மரில் ஏறி வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி ராஜவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜவேலுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.