Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி எலக்ட்ரிஷன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் எலக்ட்ரீசியனான ராமு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ராமுவை மின்சாரம் தாக்கி விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராமு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமுவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |