Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்கள்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள அக்கரைப்பட்டி பகுதியில் மாதேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் இருக்கும் வீட்டின் மேற்கூரை தகரத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டில் எலெக்ட்ரிக்கல் வேலை பார்ப்பதற்காக அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக், நவீன் ராஜா ஆகிய 2 பேரும் அங்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார்த்திக் மற்றும் நவீன் ராஜா ஆகிய இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதனை அடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த நவீன் ராஜாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |