மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் கூலித் தொழிலாளியான மணி சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது மணிசேகர் எதிர்பாராதவிதமாக சுவிட்ச் பாக்சை தொட்டுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மணிசேகரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிசேகர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.