மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குமார் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குமார் அந்த நிறுவனத்தில் இருந்த சுவிட்ச் பாக்சை தொட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.