மின்சாரம் தாக்கி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கொரக்கவாடி பகுதியில் வெங்கடாசலம்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கீழ்கல்பூண்டயில் இருக்கும் உதவி மின் வாரியத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடாசலம் நேற்று மதியம் சித்தூரில் இருக்கும் மின்மாற்றியில் பழுதை சரி செய்வதற்காக ஏறியுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வெங்கடாசலத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.