காட்டுப்பன்றி தாக்கியதால் விவசாயி படுகாயமடைந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பச்சப்பன் தொட்டி கிராமத்தில் ரவி(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று காலை தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென வந்த காட்டுப்பன்றி ரவியை தாக்கியது. அப்போது ரவியின் சத்தம் கேட்டு ஓடி வந்த சக தொழிலாளர்கள் காட்டுப்பன்றியை விரட்டியடித்து ரவியை மீட்டனர். பின்னர் ரவி தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.