வேலைக்கு சென்ற தொழிலாளி வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது கீழே தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேளி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான ஆண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூத்தாண்டன் கிராமத்தில் கட்டிட வேலைக்காக சென்றுள்ளார். அங்கு சுவற்றில் சிமெண்ட் பூசும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஆண்டி திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனால் படுகாயமடைந்த ஆண்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஆண்டி உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆண்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.