Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி… திடீரென நடந்த விபரீதம்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வேலைக்கு சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேலங்குடி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான பாலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முத்துபட்டணம் கிராமத்திற்கு  கட்டிட வேலைக்காக சென்றுள்ளார். அங்கு சென்ரிங் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாலு கம்பியை இழுத்தபோது மின்சாரம் தாக்கி நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதனால் படுகாயமடைந்த பாலுவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாலு பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலுவின்  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |