Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள அய்யனாபுரம் மேட்டுத்தெருவில் எலக்ட்ரீசியனான கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரியமேடு ராஜ முத்தையா சாலையில் இருக்கும் தனியார் தங்கும் விடுதியின் மொட்டை மாடியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கிருஷ்ணகுமார் கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டார். இதனால் படுகாயமடைந்த கிருஷ்ணகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணகுமாரின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |