மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லப்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாறைப்பட்டி பகுதியில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் கட்டிடத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்க முயன்ற போது பாலாஜி மீது மின்சாரம் பாய்ந்தது.
இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பாலாஜியை அக்கம் பக்கத்தினர் மீட்டு குஜிலியம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.