காட்டெருமை தாக்கியதால் தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பன்னிமேடு எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதியில் தொழிலாளர்கள் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த காட்டெருமை மணிகண்டன் என்பவரை முட்டி தூக்கி வீசியது. இதனால் படுகாயமடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மணிகண்டனை மானம்பள்ளி வனச்சகர் மணிகண்டன் நேரில் சென்று பார்த்துள்ளார். பின்னர் முதற்கட்ட நிவாரண தொகையாக 10 ஆயிரம் ரூபாயை மணிகண்டனுக்கு வழங்கியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.