அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேர் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிலர் புகார் மனு அளித்துள்ளனர். அதில் ரயில்வேதுறையில் உதவியாளர் பணியினை வாங்கி தருவதாக கூறி 11 நபர்களிடமிருந்து 55 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த புகார் மனுவை வியாசர்பாடி பகுதியில் வசிக்கும் தினேஷ் உள்பட பணத்தை இழந்த 11 பேர் அளித்துள்ளனர்.
மேலும் ரயில்வே துறையில் வேலை கிடைத்துவிட்டதாக கூறி போலியான ஆவணங்களை வழங்கிய 3 பேர் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.