பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளாகம் கிராமத்தில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 21 வயது பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து சத்யராஜ் அந்த பெண்ணை வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சுமார் 4 நாட்கள் கழித்து அந்த வீட்டில் இருந்து தப்பித்து வந்த பெண் நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர் கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சத்யராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.