டெல்லியில் ஏழு பெண்கள் சேர்ந்து வேலை வாங்கி தருவதாக கூறி மக்களை ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பே டெல்லி காவல் நிலையத்தில் ஒருவர் பணமோசடி புகார் அன்று அளித்தார். புகாரில் தனியார் நிறுவனத்தில் விமான நிலையங்கள், புகழ்பெற்ற அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கு முன் பணமாக 2500 செலுத்த வேண்டும் என்று கூறினார்கள். இதை நம்பி நானும் பணத்தை அனுப்பினேன் . ஆனால் அதற்கு பிறகு எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் நான் பணமோசடி உள்ளேன் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் டெல்லியில் ஒரு பகுதியில் போலி நிறுவனம் ஒன்று இயங்கி வருவதை கண்டறிந்தனர். அங்கு சென்று சோதனை நடத்தியபோது ஏழு பெண்கள் குழுவாக சேர்ந்து இதனை நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஏழு பெண்களின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த போலி ஆவணங்கள், செல்போன்கள் போன்றவற்றையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.