Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தருவதாக கூறி 4 பேரிடம் பணமோசடி…. அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வின் மகன் கைது…. பெரும் பரபரப்பு…!!!

பண மோசடி வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள கடிச்சம்பாடி கிராமத்தில் தமமுக ஒன்றிய பிரமுகரான ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகப்பட்டினம் முன்னாள் எம்பி மற்றும் அதிமுக அமைப்பு செயலாளர் கோபால், முன்னாள் அதிமுக எம்எல்ஏ வேதையனின் மகன் குகன் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். இந்நிலையில் குகன் ஆனந்தனிடம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2 விரிவுரையாளர் மற்றும் 2 அலுவலக உதவி பணியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறியுள்ளார்.

இது பற்றி சண்முகம் மற்றும் அன்பு ராஜ் ஆகிய 2 பேரிடம் ஆனந்தன் கூற, அவர்கள் விரிவுரையாளர் பணிக்காக ரூபாய் 20 லட்சத்தை ஆனந்தன் மூலமாக குகனிடம் கொடுத்துள்ளனர். இதேபோன்று மாதவன் மற்றும் தீப சங்கர் ஆகிய 2 பேரும் அலுவலக உதவியாளர் பணிக்காக 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆனந்தன் மூலமாக குகனிடம் கொடுத்துள்ளனர். இவர்கள் 4 பேருக்கும் வாட்ஸ் அப் மூலம் ஐடி கார்டு மற்றும் பணி நியமன ஆணையை குகன் அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து 4 பேரும் நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்களுடைய பணி நியமன ஆணையை காண்பித்து வேலையில் சேர வந்திருப்பதாக கூற, கல்லூரி முதல்வர் பணி நியமன ஆணை போலியானது என கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தீப சங்கர், மாதவன், சண்முகம் மற்றும் ஆனந்தராஜ் ஆகிய 4 பேரும் ஆனந்தன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவருடைய மனைவியிடம் 2 செக்குகளில் கையெழுத்து வாங்கிக் கொண்டு சென்றுள்ளனர். இதன் காரணமாக ஆனந்தன் குகனிடம் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு பணம் பற்றி கேட்டபோது அவர் ஆனந்தனை மிரட்டவே, முன்னாள் எம்பி கோபாலிடம் ஆனந்தன் பணம் பற்றி கேட்டுள்ளார். அதற்கு கோபால் எனக்கும் பணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிவிட்டார்.

கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆனந்தன், குகன் அவருடைய மனைவி உட்பட 3 பேர் மீது  நன்னிலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் 3 முறை ஆனந்தன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பண மோசடி வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தலைமறைவாக இருந்த குகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |