Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தருவதாக கூறிய டிரைவர்… 12 லட்சம் மோசடி… தந்தை மகனுக்கு வலைவீச்சு…!!

வேலை வாங்கி தருவாதாக கூறி 12 லட்சம் ரூபாயை ஏமாற்றிய தந்தை மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் செல்லாயிபுரம் பகுதியில் செல்வலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவர் அல்லிநகரம் அருகே உள்ள பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேருந்து ஓட்டுனரான அழகுமலை என்பவரது மகன் பொன்ராமிடம் ரயில்வே துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அழகுமலையும் கடந்த 2018ஆம் ஆண்டில் செல்வலிங்கம் கேட்ட 12 லட்சம் ரூபாய் பணத்தை அவரது மகன் ராஜ்குமாரிடம் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து பணத்தை பெற்றுக்கொண்ட செல்வலிங்கம் வேலை குறித்து எவ்வித பதிலும் கூறாமல் இருந்துள்ளார். இதனைதொடர்ந்து அழகுமலை மற்றும் அவரது மகன் பொன்ராம் தொடர்ந்து இதுகுறித்து கேட்டதால் கடந்த சில தினங்களுக்கு முன்புசெல்வலிங்கம் அவர்களிடம் பணி நியமன ஆணை ஒன்றை வழங்கியுள்ளார். அதனை பரிசோதித்ததில் அந்த பணி நியமன ஆணை போலியானது என தெரியவந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அழகுமலை அவர்களிடம் பணத்தை திருப்பி கேட்ட போது செல்வலிங்கம் மற்றும் அவரது மகன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே அழகுமலை இதுகுறித்து தேனி மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி செல்வலிங்கம் மற்றும் ராஜ்குமார் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள தந்தை மகனை தேடி வருகின்றனர்.

Categories

Tech |