கடலூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் கிராமத்தில் நல்லதம்பி என்பவர் வசித்து வருகிறார் இவரது முதல் தமிழரசி எம்.இ படித்துள்ளார். இந்நிலையில் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி அழகாபுரம் கிராமத்தில் வசிக்கும் கணேசன், அவரது மனைவி சாந்தி, மகன் பரத்குமார், நண்பர்களான கேசவன், பார்த்தசாரதி ஆகிய 5 பேரும் நல்லதம்பியிடம் 20 லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளனர்.
ஆனால் இதுவரை தமிழரசிக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் கொடுத்த பணத்தை திரும்பி கேட்டதற்கு அவர்கள் ஏமாற்றி வந்தனர். மேலும் நல்ல தம்பியின் மனைவி ஜெயஜோதியை 5 பேரும் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயஜோதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் கணேசன் உள்பட 5 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.