வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் தென்மாவட்டங்கள் வளர்ச்சியற்று காணப்படுவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சிவகாசி, விருதுநகர் மாவட்ட பாமக அலுவலகத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர் தமிழ்நாட்டில் எங்கே பிரச்சினை என்றாலும் அங்கே முதலில் குரல் கொடுப்பது நாங்கள்தான்.
மேலும் தென்மாவட்டங்கள் என்று சொன்னாலே அது ஒரு மிகப் பெரிய குறை வளர்ச்சி அடையாத பகுதி. தொழில் வளங்கள் இல்லாத மாவட்டங்கள். வேலை வாய்ப்பு இல்லாத மாவட்டங்கள். வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் தென்மாவட்டங்கள் வளர்ச்சி அடையவில்லை எனவும் பல பகுதிகளில் பிரச்சினைகள், சண்டைகள், சச்சரவுகள், கலவரங்கள் போன்றவை நடக்கின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.