Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலை விஷயமாக சென்ற ஆசிரியர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் வேலை நிமித்தமாக தனது மோட்டார் சைக்கிளில் மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மாந்தோப்பு விலக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ராமர் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சுரேஷின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சுரேஷ் மற்றும் ராமரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |