Categories
சென்னை மாநில செய்திகள்

வேலை.. வேலை.. வேலை… சென்னையில் உள்ள இளைஞர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக மாநிலத்தில் வேலை வாய்ப்பு முகாம் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதனால் பெரும்பாலான இளைஞர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை இல்லா திண்டாட்டத்தை குறைக்க வேலைவாய்ப்பு முகாம்களை அரசு நடத்தி வருகின்றது.

இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் அலுவலகங்களும் இணைந்து வருகின்ற ஜூன் 24ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.இந்த முகாம் ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் 30 வயதுக்குட்பட்ட 8, 10, 12 ஆம் வகுப்பு, ஐஐடி, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வரும் போது கல்வி சான்றிதழ்கள் மற்றும் முகவரிச் சான்று ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இளைஞர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |