தமிழகத்தில் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
தமிழக டிஜிபி வேல் யாத்திரைக்கு தடைவிதித்து உத்தரவிட்டார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனு இன்று மாலை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடக்கும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
அதுமட்டுமன்றி கொரோன அச்சுறுத்தலை காரணம் கூறி அனுமதி ரத்து செய்யப்பட்டதாகவும், தமிழக அரசு பாஜகவுக்கு தொடர்ந்து அனுமதி மறுப்பு தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.