தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் என். ஆர். ரவி. உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.
அப்போது, வேளச்சேரி ஒரு வழிப்பாலத்தை மாற்ற வேண்டும் என்று உறுப்பினர் ஹஸன் மௌலானா கோரிக்கை வைத்தார். அதற்கு சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து இருவழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ. வேலு பதிலளித்துள்ளார்.