Categories
மாநில செய்திகள்

வேளாங்கண்ணியில் புத்தாண்டு…. கலெக்டர் அதிரடி அதிரடி உத்தரவு….!!!!

உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கிய நிலையில் மாவட்ட கலெக்டர் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின் பெயரில் தமிழகத்தில் சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் மக்கள் வெளியில் வந்து ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். நாகப்பட்டினம் புதிய கடற்கரை மற்றும் வேளாங்கண்ணி கடற்கரை உள்ளிட்ட மாவட்டத்தின் எந்த ஒரு கடற்கரை பகுதிகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரிசார்ட்டுகள், ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், அரங்குகளில் இசை நிகழ்ச்சிக்கு இன்றும் நாளையும் தடைவிதிக்கப்பட்டுள்ளது . பைக் ரேஸ் மற்றும் அதிவேக வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  பொது இடங்களில் முக கவசம் அணிந்து வருதல் மிகவும் முக்கியம். அதனை தவறும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். தமிழக அரசின் வழிகாட்டுதலின் பெயரில் இரவு 11 மணி வரை மட்டுமே உணவு விடுதிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது”என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |