வேளாங்கண்ணியில் இருந்து 110 கிலோமீட்டர் வேகத்தில் நாகைக்கு ரயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது.
நாகை- வேளாங்கண்ணி இடையிலான ரயில் பாதை சுமார் 12 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதனால் 12 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க 30 முதல் 40 நிமிடங்கள் ஆகின்றது. ஆகையால் ரயில் பாதையின் தரத்தை மேம்படுத்துமாறும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்குமாறும் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தார்கள்.
இந்த நிலையில் மண் சரிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில் பாதையில் இருபுறங்களிலும் தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணியும் அகல ரயில் பாதையை மின் பாதையாக மாற்றும் பணியும் சென்ற இரண்டு வருடங்களாக நடந்து வந்த நிலையில் பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து ரயில்வே நிர்வாகத்தின் தொழில்நுட்ப பிரிவு மூலம் இருமுறை சோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தெற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர், மேலாளர் உள்ளிட்டோர் தலைமையிலான 50 பேர் கொண்ட தொழில்நுட்பக் குழுவின் ஆய்வு மேற்கொண்டார்கள். இப்போது 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை செய்தார்கள். இதில் வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்ட ரயில் 15 நிமிடங்களில் நாகையை சென்றடைந்தது.