கீழ்வேளூர் பகுதியில் வேளாண்காடு வளர்ப்பு என்னும் திட்டத்தின் மூலம் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படும் என வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கீழ்வேளூர் வட்டாரத்தில் தொடங்க பட்டிருக்கும் வேளாண்காடு வளர்ப்பு என்னும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக வேம்பு, தேக்கு, மலைவேம்பு, ரோஸ்வுட், ஈட்டி,மகாகனி போன்ற மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மரக்கன்றுகளை பெறுவதற்கு விவசாயிகள் அருகாமையில் உள்ள வேளாண் அதிகாரியை அணுக வேண்டும். அல்லது உழவன் செயலியில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகள் பதிவு செய்த பின்னர் வேளாண் துறை அதிகாரிகளால் நிலம் ஆய்வு செய்யப்பட்டு பின்பு மரக்கன்றுகள் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் சுற்றுப்புறச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு விவசாயிகளுக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும். இதற்காக விவசாயிகள் வரப்புகளில் நடவு செய்ய ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளும் வயல்களில் நடவு செய்ய ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதோடு மட்டுமல்லாமல் இந்த பணிக்கு ஊக்கத்தொகையாக 3 ஆண்டுகள் வரை நடப்பட்ட மரக்கன்றுகளின் எண்ணிக்கையில் 7% வழங்கப்படுகிறது. மேலும் இந்தத் திட்டத்தில் சிறு குறு விவசாயிகள் ஆதிதிராவிடர் விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.