புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் பணி அனுபவத்திட்டம் களப்பணியில் அரசு கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள லெம்பலக்குடி கிராமத்தில் குடுமியான்மலை அரசு வேளாண் கல்லூரி அமைந்துள்ளது. இந்நிலையில் லெம்பலகுடி அம்பாள் கோவில் முன் நடைபெற்ற வேளாண்மை மற்றும் பணி அனுபவத்திட்டம் களப்பணியில் மகளிர் சுய உதவிக் குழுவினர், முன்னோடி விவசாயிகள், ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து கிராம மகளிர் சுய உதவிக்குழுவினர் வண்ணப் ]பொடிகளை பயன்படுத்தி மாதிரி கிராமம், பள்ளிகள், கோவில்கள், வயல்கள், கிராம அமைப்பு ஆகியவற்றை கல்லூரி மாணவிகளுக்கு கோலமாக வரைந்து காண்பித்துள்ளனர். இதில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.