2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய அமைச்சர் பன்னீர்செல்வம் “குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகை நிலங்களாக பிரித்துள்ளனர் ஆதி தமிழர்கள். வேளாண்மையை உச்சத்திற்கு அழைத்துச் செல்ல இந்த நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் உதவும். வேளாண்துறை சார்பில் வெளியிடப்பட்ட86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது” என்றார்.