வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த இந்தியா முழுவதும் உள்ள கல்வியாளர்கள் கையெழுத்து பிரசாரம் நடத்தி வருகிறார்கள்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டெல்லியில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 38 வது நாளாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சூழலில் அந்த சட்டத்திற்கு ஆதரவாக, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த 850 க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கையெழுத்து பிரசாரம் நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் விவசாயிகளின் உணவுத் தட்டில் இருந்து பறிக்கப்படாது என்று மத்திய அரசு கூறுவதை நாங்கள் நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.