Categories
அரசியல் மாநில செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை…. விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி – ஸ்டாலின் டுவிட்…!!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறித்து ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றர். இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த இந்த வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பல்வேறு அரசியல் கட்சியினரும் வரவேற்று வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “திமுக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்தியா முழுவதும் போராடிய விவசாயிகளுக்கான வெற்றி கிடைத்துள்ளது. அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  வேளாண்சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். ஆனால் மத்திய அரசு மூன்று வேளாண்சட்டங்களையும் திரும்ப பெரும் வரையில் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |