வேளாண் சட்டங்களையும் முன்பே ரத்து செய்திருந்தால் தேவையில்லாமல் 700 உயிர்கள் பறிப்போயிருக்காது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி இந்திய மக்களுடன் உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக வாக்குறுதி அளித்தார். இதனை தொடர்ந்து விவசாய சங்க தலைவர்கள் மற்றும் புது டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.மேலும் இதற்கான நடவடிக்கைகள் இம்மாதம் நடைபெற உள்ள குளிர்கால கூட்டத்தொடரின் போது எடுக்கப்படும் எனவும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
இதுதொடர்பாக பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதற்கு விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறினார். மேலும் விவசாயிகள் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றதாகவும் அவர் கூறினார் .தொடர்ந்து பேசிய அவர் வேளாண் சட்டங்களை முன்பே ரத்து செய்திருந்தால் தேவையில்லாமல் 700 உயிர்களை இழந்திருக்க வேண்டாம் என கூறினார். உலகிலேயே போராட்டத்தால் மூன்று சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது இதுவே முதன் முறையாக இருக்கலாம் என கூறினார்.