Categories
அரசியல் தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசுக்கு அச்சம்…. ராகுல் காந்தி விமர்சனம்…!!!

விவாதங்கள் இல்லாமல் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தினர், இதையடுத்து மத்திய அரசு மூன்று வருடங்களில் திரும்ப பெறுவதாக அறிவித்து இருந்தது. இன்று காலை நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. விவாதங்கள் இன்றி இந்த மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாவது: “வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு அச்சம் கொண்டுள்ளது. விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக விவாதம் நடைபெற இருந்தது. விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது மத்திய அரசின் பலவீனத்தையே காட்டுகிறது. இருப்பினும் 3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படும் என்பது எங்களுக்கு நன்கு தெரியும்” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |