மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றுவதற்கு சட்டசபை கூட்ட வேண்டும். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
திமுகவை போலவே வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக தலைவர் எழுதியுள்ள இந்த கடிதத்தை தலைமைச் செயலகத்தில் இருக்கின்ற முதலமைச்சர் அலுவலகத்தில் திமுக எம்எல்ஏக்கள் வழங்கினர்.