ஒரு வருடம் தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து முற்றுகையிட்டு வந்த விவசாயிகள் இறுதியாக தங்களுடைய போராட்டத்தை விலக்கிக் கொள்கிறார்கள்..
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். அதன் பிறகு அந்த சட்டங்கள் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.. அதேபோல நாடாளுமன்றத்திலும் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமாகக் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒரு வருடம் தலைநகர் டெல்லியில் முற்றுகையிட்டு வந்த விவசாயிகள் இறுதியாக தங்களுடைய முற்றுகையை விலக்கிக் கொள்கிறார்கள்.. டெல்லியில் காசிப்பூர், சிங்கு டிக்ரி ஆகிய பல்வேறு பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் போராட்டம் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது.. சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, இன்று விவசாய சங்கங்களின் ஆலோசனையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர ஏகமனதாக விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளது..
டெல்லியில் இன்று நடந்த விவசாய சங்க பிரதி நிதிகளின் ஆலோசனை கூட்டத்தில் போராட்டத்தை கைவிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.தற்போது டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் சொந்த ஊர்களுக்கு திரும்ப தயாராகியுள்ளனர். பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் கூடாரங்களை காலி செய்து விட்டு வீட்டுக்கு புறப்பட ஆயத்தம் ஆகியுள்ளனர்.
போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்துள்ளது. குறைந்த பட்ச ஆதார விலை தொடர்பாக குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தது. இதனை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.