Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்கள் மரண தண்டனைக்கான ஆணை… முதல்வர் ஆவேசம்…!!!

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு மரண தண்டனை வழங்கும் ஆணையை போன்றது என டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் கடந்த 95 நாட்களுக்கு மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெருந்துறையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர்.

தற்போதுவரை போராட்டக்களத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு மத்தியில் டிராக்டர் பேரணி, உண்ணாவிரதம் மற்றும் பொது முடக்கம் என பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் நடத்தினர். இருந்தாலும் எந்த ஒரு பலனும் இல்லை. டெல்லி, சண்டிகர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டெல்லியில் பல்வேறு விவசாய சங்கங்கள் மையமிட்டுள்ள நிலையில், இன்னும் ஐந்து நாட்களில் போராட்டம் 100வது நாளை எட்டியுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மேலும் நூறாவது நாளை போராட்டம் எட்ட உள்ள நிலையிலும் விவசாயிகளின் கோரிக்கைக்கு எந்த முடிவும் கிடைக்கவில்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு மரண தண்டனை வழங்கும் ஆணையை போன்றது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நிலங்களைப் பறித்து மூன்று அல்லது நான்கு தொழிலதிபர்களிடம் ஒப்படைக்க இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் ஒட்டுமொத்த செங்கோட்டை சம்பவம் பாஜகவால் திட்டமிடப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Categories

Tech |