Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்கள்… முடிவெடுக்க முடியாது… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது தற்போதைக்கு முடிவு எடுக்கப் போவதில்லை என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு தரப்பினர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது தற்போதைக்கு முடிவு எடுக்கப் போவதில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்தப்படும் என்றும், குறிப்பிட்ட சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு உட்பட்ட தனி நபருடைய வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |