மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள்விவசாயிகளுக்கு கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தி இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
வேளாண் சட்டங்கள் பற்றி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, “வேளாண் சட்டங்கள் மூலமாக விவசாயிகள் அனைவருக்கும் கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளோம். வேளாண் சட்டங்கள் மூலமாக சந்தை, உட்கட்டமைப்பு வரி உட்கட்டமைப்பு வரி மற்றும் இடைத்தரகர் வரி என பாதி வரியை செலுத்துவதில் ஏழை விவசாயிகளுக்கு விடுதலை கிடைத்துள்ளது. இந்த சட்டங்கள் மூலமாக விற்பனை மற்றும் விலை நிர்ணயம் பற்றி விவசாயிகளே முடிவு செய்து கொள்ளலாம்.
மாநிலங்களுக்கு இடையே மத்திய அரசு பட்டியலில் இருக்கின்ற வேளாண் வர்த்தகத்தை மட்டுமே மாற்றி இருக்கிறோம். இது ஒரு சீர்திருத்த முயற்சி மட்டுமே. வேளாண் சட்டத்தில் எவ்வித குழப்பமும் கிடையாது.அதுமட்டுமன்றி ஆதாயம் கிடைக்க கூடிய வகையில் எங்கு வேண்டுமானாலும் விளைபொருட்களை விற்பனை செய்யலாம்”என்று அவர் கூறியுள்ளார்.