Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் உரிமை விவசாயிகளுக்‍கு உண்டு – உச்சநீதிமன்றம் 

வேளாண்  சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடும் உரிமை விவசாயிகளுக்கு உண்டு என்றும், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடரலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது, இது தொடர்பாக இன்றைக்குள் விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கும், டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் உரிமை விவசாயிகளுக்கு உண்டு என்றும், போராடும் உரிமை அரசியல் சாசனம் வழங்கியுள்ளதாகவும், போராட்டத்தை யாரும் குறை சொல்ல முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. இவ்விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்க பரிந்துரைப்பதாகவும் அதன் மூலம் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை விவசாயிகள் போராட்டத்தை தொடரலாம் என்றும் நீதிமன்றம் கூறியது. அதேநேரம் போராட்டத்தை அமைதியான வழியில் தொடரவேண்டும் என்றும்,  வன்முறை கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

Categories

Tech |