Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டத்துக்கு செக் – உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு …!!

வேளாண் சட்டமசோதாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்துக்கு எதிரான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. மத்திய அரசு மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. வேளான் சட்ட மசோதாவை நிறுத்தி வைக்க முடியுமா ? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அப்படி இல்லை என்றால் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

எனவே மத்திய அரசு தற்போது அவர்களது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்தால் மட்டும் தான் உச்சநீதிமன்றம் மேற்கொண்ட கோரிக்கையை ஏற்பார்கள். தற்போது இருக்க கூடிய சூழலை பார்த்தோம் என்றால் இந்த சட்டங்களை செயல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் கருத்தாக இருக்கிறது. அப்படி ஒரு வேலை நிறுத்தம் சூழல் ஏற்பட்டால் அது மத்திய அரசுக்கு பின்னடைவாக இருக்கும்.

எனவே மத்திய அரசு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் ? விவசாயிகள் போராட்டத்தை சரியாக பின்பற்றுகின்றோம் என சொல்ல போகிறார்களா ? அல்லது  இதில் நீதிமன்றம் தலையிட முடியாது போன்ற விஷயங்களை சொல்லப் போகிறார்களா ? அல்லது போராட்டத்தை நாங்கள் எந்த மாதிரியாக கையாளப் போகிறோம் ? என்று சொல்லப் போகிறார்களா ? என்பதை எல்லாம் அடுத்தடுத்து விசாரணையில் பார்க்கவேண்டி இருக்கிறது.

Categories

Tech |