டெல்லி விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளை மத்திய அரசு எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
மேலும் மத்திய அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து விளக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தொடங்கிய உடனேயே மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றார். இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் விவசாய போராட்டங்களை மத்திய அரசு கையாண்ட விதம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றும், மத்திய அரசு என்ன செய்து இருக்கிறீர்கள் ? என்பது கூட எனக்கு தெரியவில்லை என்றும், நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை நீங்களே கூறுங்கள் என்ற ஒரு விஷயத்தை தலைமை நீதிபதி கூறியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் மிக முக்கியமான முன்னெடுப்பதாக விவசாய சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நீங்கள் முடிவு செய்கிறீர்களா அல்லது அதற்கான உத்தரவை நாங்கள் பிறப்பிக்கட்டுமா என்று கூறிய நீதிபதிகள், அதற்கான இறுதி முடிவு எடுக்கும் வரை நீங்கள் அதனை நடைமுறைப்படுத்த மாட்டீர்கள் என்ற உத்தரவாதத்தை கொடுக்கிறீர்களா ? என்ற மிக முக்கியமான ஒரு கருத்தை தலைமை நீதிபதி சொல்லி இருக்கின்றார்கள்.
கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த போது, விவசாயிகளின் போராட்டத்தை எப்படி அமைதியாக நடத்துவது ? என்பது சம்பந்தமாக மட்டும் தான் விவாதங்கள் நடந்தன. தற்போது இந்த சட்டங்களுக்கு எதிரான விஷயங்களையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்கிறார்கள்.