Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டம் : அமெரிக்கா பாராட்டல….. உண்மையை போட்டுடைத்த பாஜக பிரபலம்….!!

இந்திய வேளாண் சட்டங்களை அமெரிக்கா பாராட்டி உள்ளதாக வெளியான செய்தியை பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த 70 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தங்கள் கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.

இதற்கு மத்தியில் கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. அப்போது விவசாயிகளை தடுக்க முயற்சி செய்த போலீசார் நடத்திய தடியடி தாக்குதல் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது வரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் விவசாய சட்டங்களை அமெரிக்கா பாராட்டு உள்ளதாக வெளியான செய்தியை விமர்சித்து பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “பொதுவாக வெளிநாட்டு அரசுகள் நம் அரசாங்கம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி நான் பொருட்படுத்துவதில்லை. ஆனால் அமெரிக்க அரசின் அறிக்கையை அங்கொன்றும் இங்கொன்றுமாக துண்டு துண்டாக வெட்டி, இந்திய அரசின் சட்டத்தை அமெரிக்கா பாராட்டியதை போன்ற ஒரு தோற்றத்தை இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |